தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவராக சுமங்கல டயசை பரிந்துரைக்கும் இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரியுங்கள் – கனடிய அரசாங்கத்திடன் NCCT வலியுறுத்தல்

Air Marshal சுமங்கல டயசை கனடாவுக்கான ஸ்ரீலங்காவின்  தூதுவராக பரிந்துரைக்கும் இலங்கை அரசின் கோரிக்கையை  நிராகரிக்குமாறு கனடிய அரசாங்கத்திடன்  வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடிய தமிழர்  தேசிய அவை (NCCT) இந்த கோரிக்கையை  கனடிய அரசாங்கத்திடன்  முன்வைத்துள்ளது.
தமது கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை கனடிய வெளிவிவகார அமைச்சர் அலுவலகத்திற்கு கனடிய தமிழர்  தேசிய அவை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை விமானப்படையில் உயர் பதவிகளை வகித்த சுமங்கல டயஸ், தமிழர்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை எதிர்கொள்ளும் ஒருவர் என கனடிய தமிழர்  தேசிய அவை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதி ஒன்று மக்கள் பாதுகாப்பு அமைச்சர் Bill Blair அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமானப் படைத் தளபதி சுமங்கல டயஸ் தனது பதவியில் இருந்து November மாதம் 1ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் இவரை கனடாவுக்கான தூதுவராக நியமிக்க ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்னர், இந்த நியமனம் கனடிய அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும். புதிய தூதுவராக அவரை கனடா ஏற்றுக்கொண்ட பின்னரே அவரால் பதிவியைப் பொறுபேற்க முடியும்.
முன்னரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால்  கனடாவுக்கான தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட முன்னால் பாதுகாப்பு செயலாளர் சந்திரானந்த  டி சில்வா,  முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பலக்கலவை ஆகியோரின் நியமனங்களை கனடா நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Quebec மாகாண பற்றாக்குறை $11 பில்லியன்

Lankathas Pathmanathan

கனடாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இனங்காணப்பட்ட 1,700க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment