December 11, 2023
தேசியம்
செய்திகள்

கனடாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான COVID மரணங்கள்!

COVID பெரும் தொற்றின் காரணமாக கனடாவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன

Quebec COVID தொற்றில் இருந்து 6,172 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. Ontario 3,103 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கனடாவில் இதுவரை பதிவாகியுள்ள  இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த  இரண்டு மாகாணங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளன. கனடாவில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 4.5 சதவீதமானவர்கள் மரணமடைந்துள்ளனர். கனடிய பொது சுகாதார நிறுவன தரவுகளின்படி, இறந்தவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ஏறக்குறைய ஒரு சதவீதமானவர்கள்  50 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் தெரியவருகின்றது

செவ்வாய்கிழமை (27) வரை மொத்தம் 222,000க்கும் அதிகமான  COVID தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் செவ்வாய்கிழமை அதிகளவிலான தொற்றாளர்களும் மரணங்களும் Quebecகில் பதிவாகின. Quebecகில் 963, Ontarioவில் 827, Albertaவில் 422, British Columbiaவில் 217, Manitobaவில் 184, Saskatchewanனில் 58, New Brunswickகில் 3, Nova Scotiaவில் 1, என செவ்வாய்கிழமை தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Quebecகில் 19, Ontarioவில் 4, Albertaவில் 2, என COVID தொடர்புடைய மரணங்களும் பதிவாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் செவ்வாய்கிழமை மாத்திரம் மொத்தம் 2,675 தொற்றுக்களும் இதுவரை 10,001 மரணங்களும் பதிவாகியுள்ளன. கனடாவில் செவ்வாய்கிழமையுடன்222,887 தொற்றுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

Stephen Lecce தேர்தலில் இருந்து விலக வேண்டும்: NDP வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

மீண்டும் திறக்கும் திட்டத்தை முன்னகர்த்தும் Ontario

Lankathas Pathmanathan

Text மோசடிகள் அதிகரித்துபதாக CRTC எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!