COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.
வியாழக்கிழமை கனடாவில் ….. கனடா – அமெரிக்கா எல்லை விரைவில் மூடப்படும் கனடா – அமெரிக்கா எல்லை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு வார இறுதிக்குள் மூடப்படும் என கனடியப் பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக் கருத்தை முன்வைத்தார். வெள்ளி அல்லது சனிக்கிழமைக்குள் எல்லை மூடப்படும் என பிரதமர் கூறினார். இதேவேளை தொடர் இரத்த தானத்தின் அவசியத்தையும் பிரதமர் Trudeau வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாகாணசபை உறுப்பினர் கலந்துகொண்ட அவசரகால சட்டசபை அமர்வு Ontario மாகாண சட்ட சபையில் COVID-19 தொடர்பான இரண்டு அவசரகால சட்டங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுக்கு அமைவாக, இன்றைய அமர்வில் சபாநாயகர் உட்பட 24