புதிதாக பதவியேற்ற பிரதமர் Mark Carney அமைச்சரவையில் இரண்டு தமிழர்களும் இடம் பிடித்தனர்.
கனடாவின் 23 புதிய அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (14) உத்தியோக பூர்வமாக பதவியேற்றனர்.
இவர்களில் இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர்.
தமிழர்களான ஹரி ஆனந்தசங்கரி, அனிதா ஆனந்த் ஆகியோருக்கு இம்முறையும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் நீதி அமைச்சர், சட்டமா அதிபர் (Minister of Justice and Attorney General of Canada) பதவிகளை புதிதாக ஏற்ற தமிழரான ஹரி ஆனந்தசங்கரி, முன்னர் வகித்த சுதேச உறவுகள், வடக்கு விவகார (Minister of Crown-Indigenous Relations and Northern Affairs) அமைச்சுப் பதவிகளில் தொடர்கிறார்.
அனிதா ஆனந்த் புத்தாக்கம், விஞ்ஞானம் தொழில்துறை அமைச்சராக (Minister of Innovation, Science and Industry பதவியை ஏற்றார் .
இந்த அமைச்சரவையில் 12 ஆண்களும் 11 பெண்களும் உள்ளனர்.
Alberta அல்லது Prince Edward தீவில் இருந்து இந்த அமைச்சரவையில் எவரும் இடம் பிடிக்கவில்லை.
புதிதாக பதவியேற்கும் Mark Carneyயும் அவரது அமைச்சரவையும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் March 24 அன்று மீண்டும் கூடுவதற்கு முன்னதாக ஒரு தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.