தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை: Melanie Joly

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.

அமைதி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லையென்றால் ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் Melanie Joly வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

உக்ரைன், அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் வார்த்தை மோதலின் பின்னர் Melanie Jolyயின் இந்தக் கருத்து வெளியானது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கனடிய, ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைனுக்கு தமது ஆதரவை வெளியிட்டனர்.

நியாயமான, நீடித்த அமைதியை அடைவதில் உக்ரைனுடனும், உக்ரைனியர்களுடனும் கனடா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.

Related posts

தொடர் கொலையாளி Robert Pickton நிலை குறித்து அடுத்த சில நாட்களில் மதிப்பிடப்படும்

Lankathas Pathmanathan

இறையாண்மை சட்டம்  தவறானதால்ல: Alberta முதல்வர் Smith

Lankathas Pathmanathan

Ontarioவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு Ford அரசாங்கமே காரணமென 62 சதவீதம் பேர் கருத்து

Lankathas Pathmanathan

Leave a Comment