மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த January மாதம் அனிதா ஆனந்த் கூறியிருந்தார்.
ஆனாலும் இந்த முடிவில் இருந்து தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும், வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தக அச்சுறுத்தல்கள் தன்னை தொடர்ந்து அரசியலில் நீடிக்க வைத்துள்ளது என அவர் வெள்ளிக்கிழமை கூறினார்.
அமெரிக்கா வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உள்நாட்டில் மாகாணங்களுக்கு இடையில் வர்த்தக தடைகளை கைவிடுமாறு அவர் மாகாணங்களை வலியுறுத்துகிறார்.