தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக நகர்வுகளுக்கு கனடிய பிரதமரும், மாகாண முதல்வர்களும் தயார்?

அமெரிக்கா, கனடாவுக்கு எதிராக வரிகளை விதித்தால் அதற்கான பதிலடி மூலோபாயத்தை கனடிய பிரதமரும் மாகாண முதல்வர்களும் வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
New Brunswick மாகாண முதல்வர் Susan Holt இந்தத் தகவலை வெளியிட்டார்.
கனடாவின் வரிவிதிப்பு மூலோபாயம் குறித்து, புதன்கிழமை சந்தித்த கனடிய பிரதமர் Justin Trudeauவும் மாகாண முதல்வர்களும் விவாதித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump கனடாவிலிருந்து அனைத்து இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க எச்சரித்து வருகின்றார்.
இதற்கான கனடாவின் பதில் நடவடிக்கை கனடிய பொருளாதாரத்தில் குறைந்தபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அமெரிக்க பொருளாதாரத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என  Susan Holt நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பதிலடி மூலோபாயம் எவ்வாறு இருக்கும் என்பதை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளோம் எனக் கூறிய அவர், நிர்வாகத்தின் நகர்வுகளின் அடிப்படையில் கனடாவின் பதில் நடவடிக்கை அமையும் எனவும் தெரிவித்தார்.
கனடிய மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு Alberta தவிர ஏனைய மாகாண முதல்வர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.
அமெரிக்காவிற்கான எரிசக்தி ஏற்றுமதி குறித்த கட்டுப்பாடுகளை அகற்றாவிட்டால் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை ஆதரிக்க முடியாது என Alberta முதல்வர் Danielle Smith தெரிவித்தார்.
கனடிய ஏற்றுமதிக்கு அமெரிக்காவினால் வரி விதிக்கப்பட்டால், அது தனது மாகாணத்தில் ஆயிரக்கணக்கான வேலைகளை பாதிக்கும் என Nova Scotia முதல்வர் Tim Houston கூறினார்.

Related posts

முஸ்லீம் குடும்பத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்? – நால்வர் பலி!

Gaya Raja

குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தளர்த்தப்பட்டும் COVID பயண விதிகள்

Lankathas Pathmanathan

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட Manitoba முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment