2025 இல் ஒரு பொது தேர்தல் நடைபெறும் எனவும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.
ஆனாலும் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்து NDP தலைவர் உறுதியான நிலைப்பாடுகளை வெளியிட மறுத்து வருகிறார்.
இந்த முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump எச்சரிக்கும் வரி அச்சுறுத்தலும் ஒரு காரணம் என Jagmeet Singh கூறினார்.
அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அறிவித்த நிலையில் பிரதமரின் பதவி விலகல் கோரிக்கை அதிகரித்துள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து Justin Trudeau விலக வேண்டும் என NDP தலைவர் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிரதமரை பதவி விலகுமாறு கோரும் Jagmeet Singh, தேர்தலைத் தூண்டுவதற்கு உதவ ஏன் தயாராக இல்லை என்ற கேள்வியை எதிர்கொள்கிறார்.
கனடாவுக்கு தெற்கே நிலவும் நிச்சயமற்ற தன்மையை இதற்கு ஒரு காரணமாக NDP தலைவர் குறிப்பிட்டார்.
“கனடியர்களின் நலனுக்காக சிறந்த ஒரு முடிவை எடுக்க விரும்புகிறேன்” என Jagmeet Singh கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஆதரித்து வந்த NDP, Liberal கட்சியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததன் மூலம் இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானது.
ஆனாலும் இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகளில் முடிவின் போது Justin Trudeauவின் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் ஒரே எதிர்க்கட்சியாக NDP உள்ளது.