கனடிய நிதி நிறுவனங்கள் தங்கள் பிரதான கடன் விகிதங்களை குறைத்து வருகின்றன.
கனடிய மத்திய வங்கி அறிவித்த வட்டி விகித குறைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றது.
கனடாவின் மத்திய வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதங்களை புதன்கிழமை (11) குறைத்துள்ளது.
மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை அரை சதவீத புள்ளியால் 3.25 சதவீதமாக குறைத்தது.
இந்த நிலையில் தமது பிரதான கடன் விகிதத்தை 5.95 சதவீதத்திலிருந்து 5.45 சதவீதமாக குறைப்பதாக RBC, TD, BMO,CIBC ஆகிய வங்கிகள் அறிவித்தன.
வியாழக்கிழமை (12) முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வருகிறது.