தேசியம்
செய்திகள்

NHL Stanley Cup தொடருக்கு நான்கு கனடிய அணிகள் தகுதி

நான்கு கனடிய அணிகள் NHL Stanley Cup playoffs தொடருக்கு தகுதி பெற்றன.

COVID தொற்று நோயால் குறைக்கப்பட்ட 2020-21 பருவத்திற்கு பின்னர் முதல் முறையாக, நான்கு கனடிய அணிகள் NHL Stanley Cup playoffs தொடருக்கு தகுதி பெற்றன.

Edmonton Oilers, Toronto Maple Leafs, Vancouver Canucks, Winnipeg Jets ஆகிய கனடிய அணிகள் இம்முறை இந்த தொடருக்கு தகுதி பெற்றன.

இம்முறை NHL Stanley Cup playoffs தொடரின் முதலாவது சுற்று சனிக்கிழமை (20) ஆரம்பமாகிறது.

Toronto Maple Leafs அணி Boston Bruins அணியை முதல் சுற்றில் எதிர்கொள்கிறது.

இந்த தொடர் சனிக்கிழமை ஆரம்பிக்கிறது.

Vancouver Canucks அணி Nashville Predators அணியை முதல் சுற்றில் எதிர்கொள்கிறது.

இந்த தொடர் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பிக்கிறது.

Winnipeg Jets அணி Colorado Avalanche அணியை முதல் சுற்றில் எதிர்கொள்கிறது.

இந்த தொடர் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கிறது.

Edmonton Oilers அணி Los Angeles Kings அணியை முதல் சுற்றில் எதிர்கொள்கிறது.

இந்த தொடர் திங்கட்கிழமை (22) ஆரம்பிக்கிறது.

31 ஆண்டுகளில் கனடாவின் முதலாவது NHL Stanley Cup பட்டத்தை வெற்றி பெறும் முயற்சியை இந்த அணிகள் ஆரம்பிக்கின்றன.

1993 ஆம் ஆண்டு Montreal Canadiens  அணி இறுதியாக கனடாவின் அணியாக
NHL Stanley Cup பட்டத்தை கைப்பற்றியது.

Related posts

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

Gaya Raja

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Lankathas Pathmanathan

கனடாவில் அனைத்து செய்திகளையும் அடுத்த சில வாரங்களுக்குள் அகற்ற Meta முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment