Torontoவில் நிகழ்ந்த வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
வாகனம் வீதியின் பாதுகாப்பு தடுப்பில் மோதியதில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.
புதன்கிழமை பின்னிரவு Lake Shore வீதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து பயணிகளுடன் சென்ற ஒரு மின்சார வாகனம் பாதுகாப்பு தடுப்பில் மோதி பின்னர் தீப்பிடித்ததாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் இருபது வயது மதிக்கத்தக்க நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதி செய்தனர்.
வாகனத்தில் இருந்த ஐந்தாவது நபரான ஒரு பெண் காயமடைந்த போதிலும் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படுகிறது
அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவ உதவி பிரிவினர் தெரிவித்துள்ளனர்
காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் இந்த விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.