பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி முன்வைத்துள்ளது.
ஏற்கனவே ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த நிலையில் இந்த புதிய நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி வியாழக்கிழமை (26) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்தப் பிரேரணை Conservative தலைவர் பெயரில் இருந்த போதும், அதை அவர் சபையில் சமர்ப்பிக்கவில்லை.
அவரின் சார்பாக Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Luc Berthold இந்த பிரேரணையை முன்வைத்தார்
புதிய தீர்மானம் குறித்து வியாழக்கிழமை விவாதித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (01) வாக்களிப்பார்கள்.
அரசாங்கத்துக்கு எதிரான இலையுதிர் காலத்தின் முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை (25) நடைபெற்றது.
Conservative கட்சியின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 211-120 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.