தேசியம்
செய்திகள்

இஸ்ரேலின் “சட்டவிரோத பிரசன்னத்தை” நிறுத்த கோரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது கனடா!

காசா பகுதியிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேல் தனது “சட்டவிரோத பிரசன்னத்தை” ஒரு வருடத்திற்குள் நிறுத்த வேண்டும் என  கோரும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட வாக்கெடுப்பில் பங்கேற்காமல் கனடா தவிர்த்தது.

புதன்கிழமை (18) காலை நடைபெற்ற வாக்கெடுப்பு 124-14 என்ற கணக்கில் நிறைவேறியது.

கனடா உட்பட 43 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த பிரேரணை ஒரு தலைப் பட்சமானது என ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் தூதர் Bob Rae கூறினார்.

ஆனாலும் இஸ்ரேல் சட்டவிரோதமாக பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது என்பதை கனடிய அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது என  அவர் கூறினார்.

பாலஸ்தீன அரசு ஐ.நா. பொதுச் சபைக்கு இந்த பிரேரணையை கொண்டு வந்தது.

இந்த வாக்கெடுப்பு “இராஜதந்திர பயங்கரவாதம்” என இஸ்ரேல் விமர்ச்சித்துள்ளது.

Related posts

2022 FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு கனடா தகுதி பெற்றது!

Lankathas Pathmanathan

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

Canada Post வேலை நிறுத்தம் காரணமாக கடவுச்சீட்டு சேவைகளில் தாமதம்

Lankathas Pathmanathan

Leave a Comment