December 12, 2024
தேசியம்
செய்திகள்

NDP நாடாளுமன்ற குழு சந்திப்பு

புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற குழு Montreal நகரில் சந்திக்கிறது.

Jagmeet Singh தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று நாள் வியூக அமர்வை முன்னெடுக்கிறார்.

Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP கடந்த வாரம் அறிவித்தது.

இந்த அறிவித்தலின் பின்னர் நடைபெறும் முதலாவது NDP நாடாளுமன்ற குழு கூட்டம் இதுவாகும்.

செவ்வாய்க்கிழமை (10) முதல் வியாழக்கிழமை (12) வரை Montrealலில் சந்திக்கும் 23 NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு தயாராகும் வகையில் உரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.

நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP அறிவித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலைத் தூண்டும் வகையில் பல நம்பிக்கை வாக்கெடுப்புகளுக்கு Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் Liberal அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க நம்பிக்கை வாக்கெடுப்பின் போது Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து சாதகமான கருத்துக்களை Bloc Québécois வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Austria அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்

Ontarioவில் அதிக இடங்களை Conservative கட்சி வெற்றி பெறும்: O’Toole நம்பிக்கை !

Gaya Raja

Leave a Comment