Albertaவில் Jasper காட்டுத்தீ கட்டளை மையத்தை பிரதமர் Justin Trudeau பார்வையிட்டார்.
Alberta முதல்வர் Danielle Smith உடன் இணைந்து பிரதமர் காட்டுத்தீ கட்டளை மையத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
காட்டுத்தீயை எதிர்த்து போராடும் தீயணைப்பு குழுவினர், காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார்.
Jasper காட்டுத்தீ சுமார் 34,000 ஹெக்டேர் பரப்பளவை சேதப்படுத்தியுள்ளது.
Jasper தேசிய பூங்காவில் அமைந்துள்ள நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு July 24 அன்று எரிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் சனிக்கிழமை (03) அன்று காட்டுத் தீயில் சிக்கி தீயணைப்பு வீரர் மரணமடைந்தார்.