December 12, 2024
தேசியம்
செய்திகள்

Durham பிராந்திய பல் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Durham பிராந்திய பல் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவானது.

36 வயதான பல் மருத்துவர் Sunilkumar Patel மீது குற்றச்சாட்டு பதிவானது.

அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தர்ப்பங்களில் ஒரு நோயாளியை அவர் தகாத முறையில் தொட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் July 13 அன்று Ajax நகரில் உள்ள KC பல் மருத்துவ நிலையத்தில் முதல் தடவையாக சிகிச்சை பெற்றுள்ளார்.

அவர் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக Durham பிராந்திய காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கைதான பல் மருத்துவர் Sunilkumar Patel மீது இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Scarboroughவில் உள்ள Family Smile பல் மருத்துவமனையில் பணிபுரிகிறார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

விசாரணைகள் தொடரும் நிலையில் தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Related posts

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

Gaya Raja

Quebecகில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டன!

Gaya Raja

பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 61 வயது தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment