December 12, 2024
தேசியம்
செய்திகள்

இங்கிலாந்து பயங்கரவாத சட்டத்தின் கீழ் Edmonton நபருக்கு தண்டனை

இங்கிலாந்தில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் Edmonton நபர் ஒருவர் பல குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

Edmonton நகர எரிபொருள் நிலைய ஊழியர் இங்கிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டில் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.

பயங்கரவாத குற்றச்சாட்டில்  கனடிய பிரஜை Khaled Hussein, பிரித்தானிய போதகர் Anjem Choudary ஆகியோர் செவ்வாய்க்கிழமை (23)  குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2019ஆம் ஆண்டு RCMP ஆரம்பித்த தீவிரவாதத்துடன் தொடர்புடைய விசாரணையில் Khaled Hussein அடையாளம் காணப்பட்டார்.

இவரது செயல்பாடுகள் குறித்த விசாரணையில்,  Al-Muhajiroun (ALM) இன் மற்றொரு பெயரால் அறியப்படும் இஸ்லாமிய சிந்தனையாளர் சங்கத்தில் (Islamic Thinkers Society – ITS) அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பல முன்னாள் ALM ஆதாராளர்கள் பயங்கரவாத சதித் திட்டங்களுடன் தொடர்பு பட்டனர்.

இதில் March  22, 2017 அன்று Westminster பாலத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்ட தாக்குதல், June 3, 2017 அன்று London  பாலத்தில் எட்டு பேரைக் கொன்ற தாக்குதல் ஆகியனவும் அடங்குகின்றன.

மூன்று ஆண்டுகளில் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணையில் ITS/ALM தகவல்களை Anjem Choudary  உடன் Khaled Hussein பகிர்ந்து கொண்டார் என்பதை கண்டறிந்தனர்.

June 2023 இல், இவர் Edmontonனில் இருந்து London செல்லத் திட்டமிட்டிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

RCMP வழங்கிய தகவலின் அடிப்படையில் July 17, 2023 அன்று, Londonனில் தரையிறங்கிய Khaled Hussein கைது செய்யப்பட்டார்.

Related posts

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள்

2024 Paris Olympics: இரண்டாவது தங்கம் வென்றார் Summer McIntosh

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment