February 23, 2025
தேசியம்
செய்திகள்

குடும்ப மருத்துவர் இல்லாமல் Ontarioவில் 2.5 மில்லியன் மக்கள்!

Ontarioவில் குடும்ப மருத்துவர் இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை எட்டுகிறது

2.5 மில்லியன் பேர் Ontarioவில் தற்போது குடும்ப மருத்துவர் இல்லாத நிலை உள்ளதாக மாகாண குடும்ப மருத்துவர்கள் கல்லூரி கூறுகிறது.

இந்த எண்ணிக்கை ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தரவுகளில் இருந்து 160,000 பேருக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

Ontarioவில் குடும்ப மருத்துவர்கள் இல்லாதவர்களின் சமீபத்திய எண்ணிக்கை September 2023 இல் இருந்து பெறப்பட்டதாகும்.

மேலும் குடும்ப மருத்துவர்களை கொண்ட 670,000 பேர் அவர்களை சந்திக்க 50 kilometre களுக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் கனடாவில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை கண்டறியும் பிறிதொரு திட்டமொன்றை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

2019இல் வெளியான இறுதியான மக்கள் தொகை கருத்து கணிப்பில் Ontario மக்கள் தொகை 14.57 மில்லியன் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

Gaya Raja

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment