September 18, 2024
தேசியம்
செய்திகள்

அடுத்த ஐம்பது ஆண்டுக்குள் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும்

கனடாவின் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

2073 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும் என கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

85 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளது.

அனைத்து சூழ்நிலைகளிலும் மக்கள் தொகை அதிகரிப்புக்கு இடம்பெயர்வு முக்கிய உந்துதலாக இருக்கும் என புள்ளி விபரத் திணைக்களம் கூறுகிறது.

2023 ஆம் ஆண்டில் மக்கள் தொகை சுமார் 40 மில்லியனிலிருந்து அடுத்த அரை நூற்றாண்டில் 47 மில்லியனினால் அதிகரித்து 87 மில்லியனாக உயரும் என கூறப்படுகிறது

85 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் மக்கள் தொகை 2023 இல் 896,600 மக்களில் இருந்து 2073 இல் 3.3 மில்லியனினால் அதிகரித்து 4.3 மில்லியனாக இருக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது

Newfoundland and Labrador, Nova Scotia, New Brunswick, Quebec ஆகிய இடங்களில் மக்கள் தொகை 2048 ஆம் ஆண்டு வரை அனைத்து சூழ்நிலைகளிலும் கனடாவின் மொத்த மக்கள் தொகையின் விகிதமாக குறையும் எனவும் கணிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அனைத்து சூழ்நிலைகளிலும் Saskatchewan, Alberta, British Columbia ஆகிய இடங்கள், நாட்டின் மக்கள் தொகையில் தங்கள் பங்கை அதிகரிக்கும் என கணித்துள்ளது.

Related posts

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை விசாரணையில் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

Ontarioவில் அமுலில் வந்த அவசரகால நிலை!

Lankathas Pathmanathan

Leave a Comment