தேசியம்
செய்திகள்

Stanley Cup வெற்றியை தவற விடும் நிலையில் Oilers

Stanley Cup வெற்றியை தவற விடும் நிலையில் Edmonton Oilers அணி உள்ளது.

NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Edmonton Oilers அணி தெரிவானது.

இந்த தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers அணியை Oilers அணி எதிர்கொள்கிறது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி Stanley கோப்பையை  வெற்றி பெறும்.

இதில் முதல் மூன்று ஆட்டங்களில் Panthers அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ள நான்கு  ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் Oilers அணி உள்ளது.

இந்தத் தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் 30 ஆண்டுகளில் Stanley Cup வென்ற முதலாவது கனடிய அணியாக Oilers அணி மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இம்முறை NHL Playoff தொடர் நான்கு கனடிய அணிகளுடன் ஆரம்பமானது.

இவற்றில் Toronto Maple Leafs, Vancouver Canucks, Winnipeg Jets ஆகிய கனடிய அணிகள் இம்முறை இந்த தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளன.

இறுதியாக 1993 இல் Montreal Canadiens அணி Stanley கோப்பையை வென்ற கனடிய அணியாக உள்ளது.

Related posts

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

4.9 சதவீதமாகக் குறையும் வேலையற்றோர் விகிதம்!

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment