தேசியம்
செய்திகள்

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து சாட்சியமளித்த பிரதமர்

இரகசிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடாமல் உளவுத்துறை கசிவுகளை மறுக்க முடியாது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

கனடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவில் பிரதமர் புதன்கிழமை சாட்சியமளித்தார்.

உளவுத்துறை  கசிவுகளை மறுக்க இரகசிய தகவல்களை வெளியிடுவது சில பாதுகாப்பு அதிகாரிகளை ஆபத்தில் ஆழ்த்திவிடும் என தனது சாட்சியத்தில் பிரதமர் கூறினார்.

கனடாவின் கடந்த இரண்டு தேர்தல்களில் சீனாவும் ஏனைய நாடுகளும் தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆணையர் Marie-Josée Hogue விசாரணை செய்து வருகிறார்.

பிரதமருக்கு முன்னர், முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

ஆணையர் Marie-Josée Hogueயின் இடைக்கால அறிக்கை அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியாகவுள்ளது.

Related posts

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Ontario: AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம்

Gaya Raja

Leave a Comment