தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமர் – Alberta முதல்வர் சந்திப்பு!

Carbon வரி உயர்வை இடைநிறுத்துமாறு மாகாண முதல்வர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறு Alberta முதல்வர் கனடிய பிரதமரிடம் வலியுறுத்தினார்.

கனடிய பிரதமர் Justin Trudeau, Alberta முதல்வர் Danielle Smith ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (13) நடைபெற்றது.

கடந்த கோடை காலத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் முதல் முறையாக Calgary நகரில் சந்தித்துப் பேசினர்.

அடுத்த மாதம் அமுலுக்கு வரும் Carbon வரி உயர்வை இடைநிறுத்துமாறு மாகாண முதல்வர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

Carbon வரி உயர்வுக்கு  இடைநிறுத்தம் தேவை என்று ஏழு மாகாண முதல்வர்கள் பரிந்துரைத்துள்ளனர் என இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Danielle Smith கூறினார்.

Related posts

Ontario மாகாண அரசின் COVID – 19 தொற்று நோய் தொடர்பான அறிக்கை

thesiyam

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் May மாத இறுதிக்குள் COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள்: Ontario

Gaya Raja

RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment