தேசியம்
செய்திகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணம் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் மரணம் குறித்த செய்திகள் அதிர்ச்சிகரமானவை என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் அவரது நீதிக்காக போராடும் அனைவருக்கும் தனது இரங்கலை Justin Trudeau தெரிவித்துள்ளார்

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny மர்மமான முறையில் ரஷ்ய சிறையில் உயிரிழந்துள்ளார்.

Alexei Navalny, ரஷ்யாவுக்கும் ரஷ்யர்களுக்கும்  சிறந்த எதிர்காலத்திற்காக போராடியவர் என Justin Trudeau கூறினார்.

ரஷ்யாவில் ஊழலுக்கு எதிராக போராடிய Alexei Navalny, சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் கனடிய பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த மரணம் Vladimir Putinனின் “தொடர்ச்சியான அடக்குமுறை ஆட்சியின்” வலிமிகுந்த நினைவூட்டல் என  கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கூறினார்.

இந்த மரணத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin காரணமென Conservative தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டினார்.

Vladimir Putinனின் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக  Alexei Navalny அவர் கொல்லப்பட்டார் என NDP தலைவர் Jagmeet Singh  தெரிவித்தார்.

Related posts

கனடிய அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

அமெரிக்க Open இறுதிப் போட்டியில் கனேடியர்!

Gaya Raja

Scarborough வாகன விபத்தில் தமிழ் இளைஞர் சம்பவ இடத்தில் பலி!

Gaya Raja

Leave a Comment