தேசியம்
செய்திகள்

Ontario வாகன ஓட்டுநர்கள் உரிமத் தகடுகளை புதுப்பிக்கத் தேவையில்லை!

Ontario மாகாண வாகன ஓட்டுநர்கள் தங்கள் உரிமத் தகடுகளை இனி புதுப்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்படுகிறது.

உரிமத் தகடுகளை புதுப்பிக்கும் செயல்முறையை மாகாண அரசாங்கம் தானியங்கி முறையில் செயல்படுத்தும் என அறிவிக்கப்படுகிறது.

Torontoவில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

ஆனாலும் parking tickets அல்லது toll  கட்டணங்கள் நிலுவையில் உள்ளவர்களுக்கு இந்த நடைமுறை
செயல்படாது என போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்த சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) மாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

January 2024 வரை Ontarioவில் 1,015,139 காலாவதியான வாகன உரிம தகடுகள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சகம்  உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் ரஷ்ய நிறுவனங்கள் கனடாவில் தடை!

Lankathas Pathmanathan

கனடா – அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

Gaya Raja

April 1 அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

Lankathas Pathmanathan

Leave a Comment