December 12, 2024
தேசியம்
செய்திகள்

“மலைக்கோட்டை வாலிபன்” திரைப்பட திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து

Toronto பெரும்பாக திரையரங்குகளில் இருந்து ஒரு தென்னிந்தியத் திரைப்படத்தின் திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து செய்யப்பட்டது.

மலையாள திரைப்படமான “மலைக்கோட்டை வாலிபன்” Cineplex திரையரங்கில் January 24ஆம் திகதி திரையிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் மோகன்லால் பிரதான பாத்திரமேற்று நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் முதல் காட்சி தினமன்று Toronto பெரும்பாகம் முழுவதிலும் உள்ள நான்கு திரையரங்குகளில் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

Richmond Hill, Vaughan, Scarborough, Brampton நகரங்களில் உள்ள Cineplex  திரையரங்குகளில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் “மலைக்கோட்டை வாலிபன்” திரைப்படத்தின் திரையிடலை இரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளதாக Cineplex செய்தி தொடர்பாளர் Michelle Saba கூறினார்.

தங்கள் திரையரங்குகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை இலக்கு வைக்கப்பட்ட சம்பவங்கள் என கூறும் காவல்துறையினர் அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமைகள் காரணமாக அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை என கருதுகின்றனர்

இந்த சம்பவங்கள் அனைத்தும் அதிகாலை வேளையில் நடந்ததாகவும், இதனால் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை எனவும் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Related posts

முடங்கு நிலையைத் தவிர்த்தல்: Ontario அரசாங்கத்தின் சிம்மாசன உரை

Gaya Raja

 தங்கம் வென்ற கனடிய மகளிர்  Hockey அணி!

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 13ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment