தேசியம்
செய்திகள்

கனடாவில் திருடப்பட்ட வாகனங்கள் இத்தாலியில் பறிமுதல்

கனடாவில் திருடப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்பட்ட வாகனங்கள் இத்தாலியில் பறிமுதல் செய்யப்பட்டன.

கனடாவில் திருடப்பட்ட 251 வாகனங்களை தெற்கு இத்தாலி துறைமுக மொன்றில் மீட்டதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாகனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்பட இருந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.

இந்த வாகனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக கனடாவின் பல பகுதிகளில்  திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவற்றில் பல விலையுயர்ந்த அல்லது மதிப்புமிக்க வாகனங்கள் அடங்குவதாக இத்தாலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

RCMP, Interpol ஆகியோரின் உதவியுடன், திருடப்பட்ட வாகனங்கள் கொள்கலன்களுக்குள் அடைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது 18 வெவ்வேறு சரக்குக் கப்பல்களில் தெற்கு இத்தாலி துறைமுகத்தை சென்றடைந்ததாக கூறப்படுகிறது

கனடாவில் வாகன திருட்டு பெரும் சவாலாக மாறி வருகிறது.

அனைத்து மட்ட அரசாங்கங்களும் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

Related posts

Czech Republic அணியிடம் தோல்வியடைந்த கனடா

Lankathas Pathmanathan

தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியம்

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment