தேசியம்
செய்திகள்

Calgary பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Calgary நகரில் பாடசாலைக்கு அருகில் ஒரு பெண் கொல்லப்பட்டதை அடுத்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை காலை Calgary நகரின் தென்மேற்கு பகுதியில் John Costello Catholic ஆரம்ப பாடசாலைக்கு வெளியே ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

இது ஒரு “இலக்கு வைக்கப்பட்ட சம்பவம்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையும், ஒரு பாலர் பாடசாலையும்  பூட்டப்பட்டு மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பாடசாலையின் எந்த ஊழியர்களுக்கும் அல்லது மாணவர்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குடும்ப வன்முறை காரணமாக நடந்ததாக நம்பப்படும் இதில் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்பட மாட்டாது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அருகில் சடலமாக காணப்பட்டதாகவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

கனடா வழங்கியுள்ள கடனை உக்ரைன் ஜனாதிபதி வரவேற்றார்

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபைத் தேர்தலில் 45 சதவீதம் பேர் வாக்களிப்பு!

Lankathas Pathmanathan

நாடு முழுவதும் வெப்ப எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது!

Lankathas Pathmanathan

Leave a Comment