தேசியம்
செய்திகள்

அமெரிக்க பேருந்து விபத்தில் கனடியர்கள் காயம்!

அமெரிக்காவின் New York  நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கனேடியர்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்

கடந்த வெள்ளிக்கிழமை (05) நிகழ்ந்த இந்த விபத்தின் போது மொத்தம் 23 பேர் பேருந்தில் பயணித்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்து Montreal நகரில் இருந்து New York நகருக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

காயமடைந்த பயணிகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

விசாரணைகள் தொடரும் நிலையில் இந்த விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

மேலும் அதிகரிக்கும் சராசரி வீட்டு விலை!

Gaya Raja

ஆங்கிலம், பிரஞ்சு தவிர்ந்த வேறு மொழி Ontario சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அனுமதி!

Lankathas Pathmanathan

Leave a Comment