தேசியம்
செய்திகள்

கனடிய ஆயுதப் படைகளில் பாலியல் முறைகேடுகளில் அதிகரிப்பு

கனடிய ஆயுதப் படைகளில் பாலியல் முறைகேடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டு கனடிய ஆயுதப் படைகளில் பாலியல் தவறான நடத்தை விகிதங்களில் “குறிப்பிடத்தக்க அதிகரிப்பு” ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

கனேடிய ஆயுதப்படையில் பாலியல் தவறான நடத்தை – 2022 என்ற அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

ஏறக்குறைய 1,960 படை உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அறிக்கை அளித்துள்ளனர்.

இது கனடிய ஆயுதப் படைகளில் சுமார் 3.5 சதவீதமானவர்களாகும்.

இந்த சம்பவங்கள் இராணுவ பணியிடத்தில் அல்லது பணியிடத்திற்கு வெளியில்   நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கை 2016ல் 1.7 சதவீதமாகவும், 2018ல் 1.6 சதவீதமாகவும் இருந்தது.

கனடிய ஆயுதப் படைகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெண்களிடையே அதிகமாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது

கனடிய ஆயுதப் படைகளில் 7.5 சதவீதம் பெண்கள், 2.8 சதவீதம் ஆண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Related posts

அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துகிறோம்: Liberal நாடாளுமன்ற குழு

Lankathas Pathmanathan

கனடாவில் 94 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு!

Gaya Raja

தொடர்ந்தும் ஐந்தாவது வருடமாக பொங்கலுக்காக ஒளியூட்டப்படவுள்ள Toronto அடையாள எழுத்துக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment