December 12, 2024
தேசியம்
செய்திகள்

CSIS பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள்  ஏற்றுக்கொள்ள முடியாதவை

கனடாவின் உளவு நிறுவனத்தில் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள்  ஏற்றுக்கொள்ள முடியாதவை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (Canadian Security Intelligence Service – CSIS) நான்கு அதிகாரிகள் அவர்களின் British Columbia பணியிடத்தில் எதிர்கொள்ளும் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள்  குறித்து குரல் எழுப்பியதாக தெரியவந்ததை அடுத்து பிரதமரின் இந்த கருத்துக்கள் வெளியாகின.

கண்காணிப்பு வாகனங்களில் இருந்த போது மூத்த அதிகாரியினால் ஒன்பது முறை கற்பழிக்கப்பட்டதாக பெண் CSIS அதிகாரி ஒருவர் கூறினார்.

அதே ஆணால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மற்றொரு பெண் CSIS அதிகாரி தெரிவித்தார்

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என  Justin Trudeau வியாழக்கிழமை  கூறினார்.

ஒவ்வொரு பணியிடத்தில் உள்ள ஒவ்வொருவரும் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்

இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பெண்களின் விபரங்கள் வெளியாகவில்லை.

அவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினால், சட்ட, தொழில்ரீதியான பின்விளைவுகளை எதிர்கொள்ளலாம் என அஞ்சப்படுகிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளை தனது அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக பிரதமர் கூறினார்.

Related posts

Sweden அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை: மத்திய நீதிமன்றம்

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்தனர்

Leave a Comment