புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh தனது தலைமை மதிப்பாய்வில் வெற்றி பெற்றார்.
புதிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு Hamilton நகரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை (14) கட்சி தலைவர் Jagmeet Singh தலைமைத்துவ வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.
இந்த வாக்கெடுப்பில் 81 சதவீத பிரதிநிதிகள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
Tom Mulclairருக்குப் பின்னர் NDP தலைவர் ஒருவருக்கு கிடைத்த குறைந்த அளவிலான நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.
2021இல், Jagmeet Singh 87 சதவீத பிரதிநிதிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றார்.
2018ல் அவர் 91 சதவீத பிரதிநிதிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றார்.