December 12, 2024
தேசியம்
செய்திகள்

Tel Aviv விமான சேவையை தற்காலிகமாக இரத்து செய்யும் Air கனடா

இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல்களைத் தொடர்ந்து Tel Aviv செல்லும் விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்வதாக Air கனடா தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (08) முதல் Tel Aviv செல்லும் விமான சேவையை தற்காலிகமாக இரத்து செய்வதாக Air கனடா தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் கனேடிய அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளதாக Air கனடா விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிலைமை சீரடைந்தவுடன் Air கனடா Tel Aviv விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Air கனடா Torontoவிலிருந்து Tel Aviv வரை தினசரி விமானங்களை இயக்குகிறது.

அதேவேளை Air கனடா  விமான நிறுவனம் Montrealலில் இருந்து Tel Avivவுக்கு வாரத்திற்கு மூன்று முறை விமான சேவையை இயக்குகிறது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் கடுமையான தாக்குதலை சனிக்கிழமை (07)  நடத்தியது.

பல ஆண்டுகளாக இஸ்ரேலில் நடந்த மிக மோசமான தாக்குதலாக ஹமாஸ் போராளிகள் குழு நடத்திய இந்த திடீர் தாக்குதல் அமைந்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 70 பேர் பலியானதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

Related posts

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

Olivia Chowவின் தெரிவை வரவேற்றுள்ள Justin Trudeau!

Lankathas Pathmanathan

தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment