December 12, 2024
தேசியம்
செய்திகள்

B.C. உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்

British Colombia மாகாண உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் நால்வர்  காயமடைந்தனர்.

Prince George நகரில் செவ்வாய்க்கிழமை (26) காலை இந்த உலங்குவானுர்தி விபத்துக்குள்ளானது.

இந்த உலங்குவானுர்தி தனியாருக்கு சொந்தமானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு மருத்துவ அவசர ஊர்தி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மாகாண அவசரகால சுகாதார சேவைகள் மையம் அறிவித்தது

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு புலனாய்வாளர்கள் குழுவொன்றை அனுப்பியுள்ளது.

Related posts

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

1.7 மில்லியன் டொலர் போதைப் பொருள் மீட்கப்பட்ட PROJECT ENTRUST

கனடாவில் திங்கட்கிழமை 1,232 COVID தொற்றுகள் பதிவு!

Gaya Raja

Leave a Comment