தேசியம்
செய்திகள்

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Ontario மாகாண அமைச்சரவையில் மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண முதல்வர் Doug Ford இந்த மாற்றத்தை அறிவித்தார்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து Steve Clark விலகிய நிலையில் அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் புதிய வீட்டு வசதித்துறை அமைச்சராக Paul Calandra நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆறு அமைச்சர்கள் பதவியிலும் முதல்வரினால் மாற்றம் அறிவிக்கப்பட்டது.

Prabmeet Sarkaria புதிய போக்குவரத்து அமைச்சராக பதவி ஏற்கின்றார்

Caroline Mulroney கருவூல வாரியத்தின் தலைவராகின்றார்.

நீண்ட கால பராமரிப்பு அமைச்சராக Stan Cho, வீட்டுவசதித் துறை இணை அமைச்சராக Rob Flack, போக்குவரத்து இணை அமைச்சராக Todd McCarthy, சிறு தொழில் துறை இணை அமைச்சராக Todd McCarthy பதவியேற்கின்றனர்

ஏனைய அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளில் தொடர்ந்து செயல்படுவார்கள் என Ontario மாகாண அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2024 Paris Olympics: கடந்த Olympic போட்டியை விட அதிக பதக்கங்களை வெற்றி பெறும் நிலையில் கனடா

Lankathas Pathmanathan

Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தல் முடிவால் அரசியல் அதிர்வலைகள்?

Lankathas Pathmanathan

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை

Lankathas Pathmanathan

Leave a Comment