காட்டுத்தீ காரணமாக மௌயிக்கு (Maui) அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கனடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
ஹவாய் (Hawaii ) தீவில் காட்டுத் தீ பரவி வருவதால், மௌய்க்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என கனடிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது
வேகமாக பரவி வரும் காட்டுத்தீ ஹவாய் தீவின் சில பகுதிகளை அழித்து வருகிறது.
இதனால் சில பகுதிகளில் கட்டாய வெளியேற்றம் நடைமுறையில் உள்ளது,
ஹவாய் காட்டுத் தீயின் நிலைமைகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட கனேடியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்
கனடியர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், உள்ளூர் செய்திகள், வானிலை அறிக்கைகளை கண்காணிக்கவும், வெளியேற்ற உத்தரவுகள் உட்பட உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுவரை, இந்த காட்டுத்தீயின் விளைவாக கனடியர்கள் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை என வெளிவிவகார அமைச்சு வியாழக்கிழமை (10) மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது
தீயினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளிவிவகார அமைச்சர் Melanie Joly வெளியிட்டார்.