December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்யும் மத்திய அரசு

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்ய கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் பிரதமரின் விமானம் உட்பட ஒன்பது விமானங்களை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதில் ஒன்று பிரதமர், ஆளுநர் நாயகம் உட்பட உயர் பதவியில் உள்ள அரச அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் விமானமாகும்.

இதற்காக ஐரோப்பிய விமானப் போக்குவரத்து நிறுவனமான Airbusசுடன் 3.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

தற்போது கைவசம் உள்ள விமானங்கள் 1992 முதல் உபயோகத்தில் உள்ளன.

அதன் ஆயுட்காலம் 2027அம் ஆண்டில் முடிவடையவுள்ளது.

தொழில்நுட்பம் காரணமாக இதன் பாவனையை  மேலும் நீட்டிப்பது மிகவும் கடினமானது என அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts

தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு தமிழ் இளைஞர் குற்றவாளியென தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Air Canadaவுக்கு கனடிய அரசாங்கத்தின் உதவித் திட்டம்!

Gaya Raja

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு

Lankathas Pathmanathan

Leave a Comment