தேசியம்
செய்திகள்

கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை எட்டுகிறது!

கனடாவின் மக்கள் தொகை வெள்ளிக்கிழமை (16) 40 மில்லியனை எட்டும் என எதிர்வு கூறப்படுகிறது.

40 மில்லியன் மக்கள் தொகையை எட்டுவதன் மூலம் கனடா புதிய மைல்கல்லை எட்டும் என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகின்றது.

வெள்ளி பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக 40 மில்லியன் மக்கள் தொகையை கனடா எட்டும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா G7 நாடுகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

January 2021 முதல் 2022 வரை கனடாவின் மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.7 சதவிகிதமாக பதிவானது.

இது 1957ஆம் ஆண்டின் பின்னர் பதிவு செய்யப்படாத அதிகபட்ச அதிகரிப்பாகும்.

தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில், கனடாவின் மக்கள் தொகை 2043ஆம் ஆண்டளவில் 50 மில்லியனை எட்டும் என புள்ளி விபரத் திணைக்களம் கூறுகிறது.

Related posts

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

மனைவியை கொலை செய்ததற்காக தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Gaya Raja

கனடாவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மேலும் 20 ஆயிரம் ஆப்கானியர்கள்!

Gaya Raja

Leave a Comment