கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து விலகவேண்டும் என கோரிக்கையை David Johnston நிராகரித்தார்.
David Johnston தனது பதவியில் இருந்து விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (31) வாக்களித்தனர்.
David Johnston பதவி விலக வேண்டும் என கோரும் பிரேரணையை NDP நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.
ஆனாலும் தனது ஆணை முடியும் வரை அந்தப் பணியைத் தொடர வேண்டிய கடமை தனக்கு உள்ளதாக David Johnston ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.