December 12, 2024
தேசியம்
செய்திகள்

WestJet விமானிகளுக்கு 24% ஊதிய உயர்வு?

அண்மையில் எட்டப்பட்ட WestJet விமானிகள் ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளில் 24 சதவீதத்தில் ஊதிய உயர்வை உறுதியளிக்கிறது.

WestJet நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் WestJet விமானிகள் 24 சதவீத ஊதிய உயர்வை பெறுவார்கள்.

இந்த வருடம் WestJet விமானிகள் ஒரு மணிநேர ஊதியத்தில் 15.5 சதவீத உயர்வை பெறுவார்கள்.

அதேவேளை அடுத்த ஆண்டு முதல் 2026 வரை ஒரு மணி நேர ஊதியத்தில் 8.5 சதவீத உயர்வை பெறுவார்கள் என தெரியவருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிற்சங்கம் அதன் முக்கிய இலக்குகளான சிறந்த ஊதியம், வேலை பாதுகாப்பு ஆகியவற்றை பெற்றுள்ளதாக விமானிகள் சங்கத்தின் தலைவர் இன்று கூறினார்.

WestJet நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் எட்டு மாதம் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை (19) அதிகாலை ஒரு தற்காலிக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா எதிர்கொள்ளும் மிகவும் தீவிரமான சூழ்நிலை: பிரதமர் விளக்கம்

Lankathas Pathmanathan

கனடா எல்லையில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்கிறது

Gaya Raja

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

Leave a Comment