தேசியம்
செய்திகள்

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரும் முன்னாள் Alberta முதல்வரின் முயற்சி தோல்வி

தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்ற முன்னாள் Alberta முதல்வரின் முயற்சி தோல்வியடைந்தது.

புதன்கிழமை (24) வெளியிடப்பட்ட தீர்ப்பில் இந்த முடிவு நீதிபதியால் அறிவிக்கப்பட்டது.

முன்னாள் Alberta முதல்வர் Jason Kenneyக்கு எதிராக ஐந்து சுற்றுச்சூழல் அமைப்புகள் அவதூறு வழக்கு தொடர்ந்தன.

Albertaவில் சுற்றுச்சூழல் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து Jason Kenney தலைமை வகித்த United Conservative கட்சி முன்னெடுத்த விசாரணையின் எதிரொலியாக இந்த வழக்கு ஆரம்பமானது.

இந்த முடிவு குறித்து Jason Kenney அல்லது அவரது வழக்கறிஞர்கள் கருத்துகள் எதனையும் தெரிவிக்கவில்லை.

Related posts

பொருளாதார முன்னேற்றத்தில் தடை?

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தளர்த்தப்பட்டும் COVID பயண விதிகள்

Lankathas Pathmanathan

Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்தும் Nike

Lankathas Pathmanathan

Leave a Comment