December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec வெள்ளத்தில் காணாமல் போன தீயணைப்பு படையினர் சடலமாக மீட்பு

Quebec மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது காணாமல் போனதாக தேடப்பட்ட தீயணைப்பு படையினர் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட இரண்டு தீயணைப்பு படையினரை தேடும் பணி திங்கட்கிழமை (01) முதல் தொடர்கிறது.

இந்த நிலையில் காணாமல் போன இருவரின் சடலங்களும் புதன்கிழமை (03) மீட்கப்பட்டன.

Quebec மாகாண காவல்துறை உலங்குவானூர்தி இந்த சடலங்களை புதனன்று கண்டுபிடித்துள்ளது.

முதலாவது சடலம் காலை 10 மணியளவிலும், இரண்டாவது சடலம் 2 மணியளவிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

சடலங்கள் மீட்கப்பட்டது குறித்து பலியானவரின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட தன்னார்வ தீயணைப்பு படையினரின் குடும்பத்தினருக்கு பிரதமர் Justin Trudeau தனது அனுதாபங்களை தெரிவித்தார்.

Related posts

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

ஐந்து ஆண்டுகளில் Toronto வீட்டு விலைகள் 42 சதவீதம் – வாழ்க்கைச் செலவு 17 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

பணி நீக்கம் செய்யப்படும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment