கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தினர் வியாழக்கிழமை (27) தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
கனடிய பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் வியாழனன்று ஒன்பதாவது நாளாக தொடர்கிறது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பொது ஊழியர்கள் வியாழனன்று தலைநகர் Ottawa முழுவதும் மறியல் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.
இதன் காரணமாக Ontario, Quebec மாகாணங்களுக்கு இடையிலான பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக சீர்குலைந்தது.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை ஆராந்து வருவதாக கருவூல வாரியத் தலைவர் Mona Fortier தெரிவித்தார்.
கருவூல வாரியம், கனடிய வருவாய் துறையின் கீழ் கடமையாயிற்றும் கனடாவின் பொதுச் சேவை கூட்டணியின் 155 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.