December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebecகில் பலர் மின்சாரத்தை இழந்த நிலை தொடர்கிறது

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கும் முயற்சிகள் தொடர்வதாக Hydro-Quebec அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக Quebec, Ontario மாகாணங்களில் 1.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் வரை மின்சாரத்தை இழந்தனர்.

வியாழக்கிழமை (06) மாலை 6 மணிவரை 900 ஆயிரம் Hydro-Quebec வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் மின்சாரத்தை இழந்த நிலையில் உள்ளனர்.

இவர்களில் 448 ஆயிரம் பேர் வரை Montrealலில் உள்ளதாக தெரியவருகிறது.

இவர்களில் 70 முதல் 80 சதவீத வாடிக்கையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் (07) மின்சாரத்தை மீண்டும் வழங்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனாலும் சனிக்கிழமை (08) வரை 350 ஆயிரம் பேர் மீண்டும் மின்சாரத்தை பெறாத நிலை தொடரலாம் என எச்சரிக்கப்படுகிறது.

மின் இணைப்புகளை வழங்கும் முயற்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட Hydro-Quebec பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக Quebec எரிசக்தி அமைச்சர் Pierre Fitzgibbon தெரிவித்தார்.

Related posts

மீண்டும் உயரும் பாலின் விலை

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கட்சித் தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இரத்து செய்யும் பசுமைக் கட்சி!

Gaya Raja

Leave a Comment