தேசியம்
செய்திகள்

ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா

ரம்ஜான் பண்டிகையின் போது ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கனடா கண்டித்துள்ளது.

ஜெருசலேம் மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது புதன்கிழமை (05) இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதல் குறித்த ஒளிப்படங்கள் வெளியாகிய நிலையில் இந்த வன்முறைக்கான தனது கண்டனத்தை கனடிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலை பிரதமர் Justin Trudeau கண்டித்தார்.

புனிதத் தலங்களின் புனிதம் மதிக்கப்பட வேண்டும் என தனது கண்டனத்தை புதன்கிழமை Twitter மூலம் கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly பதிவு செய்தார்.

சமாதானத்திற்கான வாய்ப்புகளை குறைப்பதற்கு பங்களிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை கனடா எதிர்க்கும் எனவும் அமைச்சர்குறிப்பிட்டார்.

ஆனாலும் இந்த தாக்குதல் குறித்த தனது அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையை Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விடயத்தில் கனடா அறிக்கைகளை மாத்திரம் வெளியிடுவதுடன் இருந்து விட முடியாது என அவர் கூறினார்.

கண்டனத்தை வெளிப்படுத்தும் அறிக்கைகளை தாண்டி வெளியுறவு அமைச்சர் Melanie Joly, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid தெரிவித்தார்.

Related posts

தீவிரமடையும் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம்

Lankathas Pathmanathan

சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒப்பந்தம் அவசியம்: பிரதமர்

Lankathas Pathmanathan

NDP தலைவர் எதிர்கொண்ட துன்புறுத்தல் தொடர்பான காவல்துறை விசாரணை ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment