தேசியம்
செய்திகள்

St. Catharines நகர தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் மரணம்

Ontario மாகாணத்தின் St. Catharines நகர தொழிற்சாலை தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் மரணமடைந்தார்.

தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணமடைந்ததாக காவல்துறை கூறுகிறது.

வியாழக்கிழமை (12) கழிவுப்பொருள் வளாகத்தில் ஏற்பட்ட தொடர் வெடிப்பு தீ விபத்தில் படுகாயமடைந்தவர் மரணமடைந்தார்.

உயிர் ஆபத்தான காயங்களுடன் அவர் Toronto வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக Niagara பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர் 30 வயதான St. Catharines வாசி என தெரிவிக்கப்படுகிறது.

அவரது பெயர் விபரங்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.

விசாரணைகள் தொடரும் நிலையில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Related posts

ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரில் கனடா முதல் வெற்றி

Lankathas Pathmanathan

பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண  அரசாங்கம் ஆலோசனை

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment