December 12, 2024
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy நன்றி தெரிவித்தார்.

உக்ரைனுக்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமான ஏவுகணை உபகரணங்களை கனடா வழங்கும் என்ற அறிவிப்பை செய்வாய்க்கிழமை (10) கனடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.

இந்த நன்கொடைக்கு உக்ரைன் ஜனாதிபதி, கனடிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

Justin Trudeauவின் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு ஆதரவான உண்மையான தலைமை மீண்டும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.

கனடாவின் நன்கொடை அழிவுகரமான வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த உதவும் எனநம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

January மாதம் சில்லறை விற்பனையில் வீழ்ச்சி

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

Lankathas Pathmanathan

Leave a Comment