தேசியம்
செய்திகள்

உரிமையாளர்கள் அனுமதியின்றி வீடு விற்கப்பட்ட சம்பவம்

வீட்டு உரிமையாளர்கள் அனுமதியின்றி வீடொன்று விற்கப்பட்ட சம்பவம் குறித்து Toronto காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வீட்டு உரிமையாளர்களாக தங்களை அடையாளம் காட்டி வீட்டை விற்பனை செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண கால்வதுறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதனை ஒரு சிக்கலான அடமான மோசடி விசாரணை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு January மாதம் வேலை காரணமாக கனடாவை விட்டு வீட்டு உரிமையாளர்கள் வெளியேறிய நிலையில் அவர்களின் வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமக்கு தெரியாமல் தங்களது வீடு விற்கப்பட்டதை அவர்கள் பல மாதங்களுக்குப் பின்னரே அறிந்துள்ளனர்.

ஒரு ஆணும் பெண்ணும் வீட்டு உரிமையாளர்களாக போலி அடையாளத்தைப் பயன்படுத்தி வீட்டை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Related posts

பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது!

Lankathas Pathmanathan

பொருளாதார அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment