அடுத்த ஆண்டில் கனடிய வீட்டு விலைகள் சராசரியாக 3.3 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Re/Max கனடா இந்த முன்னறிவிப்பை வெளியிட்டது.
Ontarioவிலும் மேற்கு கனடாவிலும் மிகப்பெரிய விலை சரிவு எதிர்பார்க்கப்படுகிறது.
சில இடங்களில் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை குறையக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள முகவர்களின் ஆய்வுகளைப் பயன்படுத்தி இந்த முன்னறிவிப்பை Re/Max கனடா வெளியிட்டது
Kelowna, B.C., Nanaimo, B.C., Durham, Ontario ஆகிய பகுதிகளில் அடுத்த ஆண்டு வீடுகளின் விலைகள் 10 சதவீதம் குறையும் என எதிர்வு கூறப்படுகிறது.
Barrie, Ontarioவில் வீட்டு விலை 15 சதவீதம் குறையும் எனவும் Re/Max கனடா முன்னறிவிப்பை வெளியிட்டது.
Toronto பெரும்பாக்கத்தில் விலைகள் 11.8 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Vancouver பகுதியில் விலைகள் 5 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Calgary நகரில் வீட்டு விற்பனை விலை 7 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edmonton நகரில் 3 சதவீதமும், Halifax நகரில் 8 சதவீதமும் விலை அதிகரிப்பு கணிக்கப்பட்டுள்ளது.