தேசியம்
செய்திகள்

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடியர்கள் கைது

சிரியாவில் உள்ள ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதை RCMP உறுதிப்படுத்தியது.

27 வயதான Oumaima Chouay, Montreal விமான நிலையத்தில் கைதானார்.

இவர் 2014ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமலாக்க குழுவின் விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாகவும் RCMP தெரிவித்தது.

அதேவேளை Kimberly Polman, Montreal விமான நிலையத்தில் கைதாகி, British Colombia அழைத்து செல்லப்படுவதாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.

வடகிழக்கு சிரியாவில் இருந்து இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் என நான்கு கனடியர்கள் கனடாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதை வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்த கனேடியர்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என இன்று கனடிய பிரதமர், குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் ஆகியோர் தெரிவித்தனர்.

Related posts

COVID விதிகளை மீறியதற்கு மன்னிப்பு கோரிய NDP தலைவர்

Gaya Raja

ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க உத்தேசம்

Lankathas Pathmanathan

Ontario மாகாண NDP தலைவராக பதவியேற்கும் Marit Stiles

Lankathas Pathmanathan

Leave a Comment