தேசியம்
செய்திகள்

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Ontarioவில் கடந்த ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் பதிவாகியுள்ளன

கடந்த May மாத ஆரம்பத்தில் தொற்றின் ஆறாவது அலையின் பின்னரான அதிக இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.

மாகாண சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (20) வெளியிட்ட புதிய தரவுகளிலிருந்து இறப்புகளின் எண்ணிக்கை வெளியானது.

கடந்த வாரத்தில் 67 இறப்புகள் Ontarioவில் பதிவாகியுள்ளன.

வியாழனன்று வெளியான தரவுகளின்படி, தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,663 ஆக இருந்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 1,629 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்து ஆலயத்தின் முன்பாக போராட்டம்!

Lankathas Pathmanathan

தொடர்ச்சியாக 9ஆவது நாளாக 4,000க்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

Gaya Raja

Star Blanket Cree Nation பகுதிக்கு பிரதமர் செல்லாதது குறித்து ஏமாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment